உடுமலை: உடுமலை, 'சைனிக்' பள்ளியில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் இறந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; பாதிப்புக்கு உள்ளான, 20 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
உள்ளனர். உடுமலை, அமராவதி நகரில், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ், 'சைனிக்' பள்ளி செயல்படுகிறது. இங்கு, பழநியைச் சேர்ந்த விவசாயி விஜயராகவன், 45, என்பவரின் மகன் சித்தார்த், 11, விடுதியில் தங்கி, ஆறாம் வகுப்பு படித்து வந்தான். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவன், நேற்று, பள்ளியில் மயங்கி விழுந்ததால், உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்; ஆனால், வழியிலேயே அவன் இறந்துவிட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த பெற்றோர், உறவினர்கள், மருத்துவமனையில் முற்றுகையிட்டனர். மரணத்தில் மர்மம் விஜயராகவன் கூறுகையில், ''என் மகனுக்கு, நேற்று முன்தினம் மாலையே காய்ச்சல் இருந்துள்ளது. இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் தகவல் கொடுக்காமல், நேற்று காலை, உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்ததாக தெரிவித்தனர். இங்கு, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்; மகனின் இறப்பில் மர்மம் உள்ளது,'' என்றார். பள்ளி முதல்வர் ஸ்ரீதர் கூறுகையில், ''நேற்று முன்தினம் மாலை, மாணவனுக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் பள்ளியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று காலை மயக்கமடைந்ததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்,'' என்றார். டெங்கு இல்லை மாவட்ட, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் விஜயகுமார் கூறுகையில், ''உடல்நலம் பாதித்த சித்தார்த்துக்கு புரையேறி, மருத்துவமனை வரும் வழியில் இறந்தார். அனுமதிக்கப்பட்டுள்ள, 20 மாணவர்களில் எட்டு பேருக்கு, லேசான காய்ச்சல் உள்ளது. டெங்குவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது, பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மாணவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது,'' என்றார். சம்பவத்துக்கு பின், வரும், 24ம் தேதி வரை, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக