வரும் கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வில், எந்தவித மாற்றமும் இல்லை; பழைய முறையே பின்பற்றப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
வரும், 2017 - 18ம் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, கட்டாய பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, வரும் கல்வி ஆண்டில் புதிதாக சேரப்போகும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, மொத்த மதிப்பெண், 600 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த மாணவர்கள், 2018 - 19ல், பிளஸ் 2 செல்லும் போது, பிளஸ் 1ல் எழுதியது போன்று, மொத்தம், 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். இறுதியில், 1,200 மதிப்பெண்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2க்கான, ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். இந்நிலையில், தற்போது பிளஸ் 1 முடித்து, பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு, தேர்வு முறையில் மாற்றம் உள்ளதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் கூறியதாவது: மார்ச்சில் நடந்த ஆண்டு இறுதி தேர்வை முடித்த, பிளஸ் 1 மாணவர்கள், வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 2 படிக்க உள்ளனர். அவர்களுக்கு, தேர்விலோ, மதிப்பெண் முறையிலோ, தேர்வுக்கான நேரத்திலோ மாற்றம் இல்லை. தற்போது நடைமுறையில் இருக்கும், 1,200 மதிப்பெண்களுக்கு, கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட முறைகளிலேயே, அவர்களுக்கு தேர்வு நடக்கும். மூன்று மணி நேரம் தேர்வு எழுத வேண்டும். தேர்வு முடிவில், பிளஸ் 2க்கு மட்டுமே, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, இந்தாண்டு பிளஸ் 2 படிக்க உள்ள மாணவர்கள், இதில் எந்த குழப்பமும் அடைய வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக