லேபிள்கள்

23.5.17

தலைமை ஆசிரியர் பணிக்கு நடந்த கலந்தாய்வில் ஓய்வு பெற்றவர்கள் கலந்து கொண்டது ஏன்? பள்ளி கல்வித்துறை இயக்குனர் விளக்கம்

அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20–ந் தேதி நடைபெற்றது.

அதில் 490 பேர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர். இவர்களில் பலர் கடந்த கல்வி ஆண்டின் இடையே பணி ஓய்வு பெற்றவர்கள். கலந்தாய்வில் ஓய்வு பெற்றவர்கள் கலந்து கொண்டது ஏன்? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன் விளக்கம் அளித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கல்வி ஆண்டின் இடையில் ஒருவர் பணி ஓய்வு பெற்றாலும் அவர்கள் அந்த கல்வி ஆண்டின் இறுதி நாளான மே 31–ந் தேதி வரை பணியில் இருப்பார்கள். எனவே அவர்கள் அரசின் விதிமுறைகளின் முன்னுரிமை வரிசைப்படி பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறுவார்கள். ஆனால் அவர்கள் பணியில் சேரும் தேதி ஜூன் 1 –ந்தேதி என பணிநியமன ஆணையில் குறிப்பிடப்பட்டு இருக்கும். எனவே அவர்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியில் சேர முடியாது. இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை’ என கூறினார்.
இதன் காரணமாக பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாகவே இருக்கும். பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பது சரி அல்ல என்று கல்வியாளர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக