லேபிள்கள்

24.5.17

கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி தள்ளிப்போகுமா?

கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதியை தள்ளிப்போடலாமா? என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். 



தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் 1–ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது. ஆனால் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் கடுமையாக உள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்தது. இதன் காரணமாக ஏரிகள், குளங்களில் தண்ணீர் வற்றின. நிலத்தடி நீரும் குறைந்து விட்டது. பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதன் காரணமாக பள்ளிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருக்கிறது. மாணவ–மாணவிகள் குடிநீருக்கே அவதிப்பட நேரிடும்.
அதிகாரிகள் ஆலோசனை
கடுமையான வெயில் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவ–மாணவிகள் சோர்வு அடையும் நிலை ஏற்படும். வெயில் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டன. அதேபோல் பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதியையும் தள்ளிப்போட வேண்டும் என்று மாணவ–மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
எனவே கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கூடங்களை திறக்கும் தேதியை தள்ளிப்போடலாமா? என்று அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். ஏற்கனவே 2013–ம் ஆண்டு ஒரு வாரம் பள்ளிக்கூடங்கள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக