அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், இனி பள்ளிகளில் மாற்று சான்றிதழ் முறை தேவைப்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த வெள்ளாள பாளையத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாமைத் அமைச்சர் செங்கோட்டையன் துவங்கிவைத்தார்.
பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: '' பள்ளி மாணவர்களின் முழு விவரங்களை கம்ப்யூட்டரில் ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளன. ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மாணவர்களின் திறமைகள், தேர்வு மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை அறியலாம்.
பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை, கல்விச்சூழல், ஆசியரியர்கள் விவரம் போன்றவையும் ஆகியவற்றையும் அரசு எளிதாக அறிய முடியும். ஸ்மார்ட் கார்டுகள் வந்துவிட்டால் மாற்றுச் சான்றிதழ்களுக்கான தேவைகள் இருக்காது. ஒருங்கிணைக்கப்படும் தகவல்கள் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு தீர்வு காண வழிவகை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக