லேபிள்கள்

27.5.17

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு: நாளை 'ரிசல்ட்'

'மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள், நாளை பகல், 12:00 மணிக்கு முன் வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச்சில் நடந்தது. இதில், 10 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த, 10.98 லட்சம் பேர் பங்கேற்றனர். 'இந்த தேர்வு முடிவுகள், நாளை பகல், 12:00 மணிக்கு முன் வெளியிடப்படும்' என, சி.பி.எஸ்.இ., அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை, www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக