லேபிள்கள்

26.11.17

10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிற மொழியினருக்கு விலக்கு

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழை கட்டாய பாடமாக எழுதுவதில் இருந்து, பிறமொழி மாணவர்களுக்கு, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், ஒரு தரப்பினர், பிறமொழியை தாய் மொழியாக கொண்டவர்கள். பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள மாணவர்கள், தங்கள் மாநில மொழியை தேர்வு செய்து, 10ம் வகுப்பில் படிக்கின்றனர்.
இவர்களுக்கு, 10ம் வகுப்பில், தமிழ் தேர்வு கட்டாயம் என்ற விதியில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பரிந்துரை கடிதத்தை, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன், மெட்ரிக் இயக்குனர், கருப்பசாமி ஆகியோர், பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவுக்கு அனுப்பியுள்ளனர். 
அது பரிசீலிக்கப்பட்டு, தமிழை கட்டாய பாடமாக எழுதும் விதியில் இருந்து, விலக்கு அளித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக