லேபிள்கள்

28.11.17

ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பள்ளிகள் தவிப்பு !

தமிழ்நாடில் பள்ளி கல்வி முக்கியமானது. நாளைய பாரதம் யாரதன் காரணம் என்றால் அதற்கான விடை மாணவர்கள்தான
என்பதை நாம் படித்திருக்கிறோம் அப்படிப்பட்ட எதிர்கால தலைவர்களை உருவாக்கும் இன்றைய பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதிகுள்ளாகுகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீ மதுரை ஊராட்சி கூங்கூர் மூலமா மேல்நிலைப்பள்ளியில் 520 மாணவர்கள் பயில்கின்றனர்.இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மிகுந்த சிக்கலில் உள்ளனர். ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் வெறும்  மாணவர்களை கொண்ட  வகுப்பறை வெறுமையில் உள்ளது. மாணவர்கள் இதன் பொருட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் வேதியியல், தமிழ், அறிவியல் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இன்றி மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர். இதனை அரசு கவனித்து மாணவர்கள் தேவையை பூர்த்தி செய்து தர வேண்டும்.

தலை ஆசிரியர்கள் இல்லாத அரசு பள்ளிகள்:
கோவை மாவட்டத்தில் 17 பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் கற்ப்பித்தல் மற்றும் நிர்வாகப்பணிகள் பாதிப்படைகின்றனர். தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இல்லாமல் மாநிலம் முழுவதும் 900 பணியிடங்கள் காலியாகவுள்ளன அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 17 பள்ளிகள் தத்தளிக்கின்றன.

தலைமை ஆசிரியர் வாரத்தில் பத்து  வகுப்புக்களை கையாள்வதுடன் நிர்வாகப்பணிகளை கண்காணிக்க வேண்டும். தற்பொழுது அப்பணியை தலைமை துணை ஆசிரியர் மேற்கொள்வதால் பணிச்சுமை பெருகுகின்ற்து, இவ்வாண்டு கல்வியாண்டு தொடங்கி ஆறுமாத காலங்களை தொட்டுவிட்டன. அத்துடன் இன்னும் நான்கு மாதத்தில் பொதுத்தேர்வு நெருங்கவுள்ள நிலையில் மாணவர்களை தேர்வில் படிக்க வைக்க வேண்டும் அத்துடன் தேர்வரைகள் , கண்காணிப்பு பணிகள் , போன்ற பல்வேறு பணிகளை நடத்த வேண்டிய பொருப்புகள் இருப்பதால் அரசு இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு ஆசிர்யர்களை நியமிக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் தேவை இன்றியமையாமை ஆகும். இதனை உணர்ந்து  பள்ளிக்கல்வித்துறை செயல்பட வேண்டியது அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக