ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழுக்கூட்டம் மதுரையில் டிச., 8 ம் தேதி
ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்தவும், புதிய ஊதியக்குழு
அமல்படுத்த கோரி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் செப்.,7,8 மாநிலம்
முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு
உயர்நீதிமன்றம் தடை விதித்தால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஜாக்டோ -ஜியோ வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து
வருகிறது. இவ்வழக்கு டிச. 4ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக இருந்தது.
நீதிமன்ற முடிவுக்கு ஏற்ப அன்றே அடுத்த கட்ட நடவடிக்கையை கூடி
தீர்மானிக்க ஜாக்டோ- ஜியோ முடிவு செய்து இருந்தனர். இந்நிலையில்
இவ் வழக்கு டிச.8ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இது குறித்து ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் பேட்ரிக்
இது குறித்து ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் பேட்ரிக்
ரெய்மாண்ட் கூறுகையில், ''நீதிமன்ற வழக்கு டிச.8 ம் தேதி விசாரணைக்கு
வரஉள்ளதால் அன்று மாலை 4:00 மணிக்கு மதுரை அரசு ஊழியர் சங்கத்தில்
ஜாக்டோ- ஜியோ உயர் மட்ட குழுக்கூட்டம் நடைபெறும்'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக