லேபிள்கள்

27.11.17

'நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது?

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு, அடுத்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுதோறும், மே மாதம், நீட் தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டுக்கு, ஏப்ரலில், இந்த தேர்வு நடத்தப்படலாம் என, கூறப்படுகிறது.இது தொடர்பாக ஆலோசிக்க, சி.பி.எஸ்.இ.,யின், நீட் தேர்வு கமிட்டி, விரைவில் கூடுகிறது. டிச., மூன்றாம் வாரம் தேர்வு அறிவிப்பு வெளியாகலாம் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு, தமிழக மாணவர்கள், முழுமையாக, நீட் தேர்வில் பங்கேற்க உள்ளனர். அதனால், நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை, 11.35 லட்சத்திலிருந்து, 13 லட்சத்துக்கும் மேல் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக