'பிளஸ் 1 பொதுத் தேர்வில், தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு முறை கிடையாது' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.
அதே போல், பிளஸ் 1 வகுப்புக்கும், இந்த ஆண்டு முதல், மாநில அளவில், பொதுத் தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, பிளஸ் 1க்கு, இந்த ஆண்டு முதல், 100 மதிப்பெண்களுக்கும், பிளஸ் 2வுக்கு அடுத்த ஆண்டு முதல், 100 மதிப்பெண்களுக்கும், பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், தனித்தேர்வர்களுக்கு, பிளஸ் 1 தேர்வுக்கான மதிப்பெண் முறையை, தமிழக அரசு, நேற்று அறிவித்தது.
இது தொடர்பாக, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணை:
பிளஸ் 1 மாணவர்களுக்கு, 90 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். மீதமுள்ள, 10 மதிப்பெண்களுக்கு, மாணவர்களின் வருகைப்பதிவு, உள்நிலை என்ற, 'இன்டர்னல்' தேர்வு, செயல்திட்டம், களப்பயணம் ஆகியவற்றின் அடிப்படையில், அக மதிப்பீடு வழங்கப்படும்
தனித்தேர்வர்களுக்கு, அக மதிப்பீடு முறை பொருந்தாது. அதற்கு பதில், 90 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தி, அதை, 100க்கு மாற்றிக் கொள்ள வேண்டும்
மாற்றப்படும் மதிப்பெண்ணில், அரை, கால் மதிப்பெண்கள் வந்தால், சிறியது, பெரியது என, மதிப்பு பாராமல் அடுத்த, முழு மதிப்பெண்ணாக மாற்றிக் கொள்ளலாம்
தனித்தேர்வர்களை பொறுத்தவரை, 100 மதிப்பெண்களுக்கு, குறைந்த பட்சம், 35 மதிப்பெண் பெற்றால், தேர்ச்சி பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக