மத்திய அரசின், நவோதயா பள்ளிகளில், எட்டு பதவிகளுக்கு, 683 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டிச., 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசின், நவோதயா வித்யாலயா பள்ளிகள், நாடு முழுவதும், 576 மாவட்டங்களில் செயல்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், உண்டு, உறைவிட பள்ளிகளாக, அவை செயல்படுகின்றன. இவற்றில், மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், நவோதயா பள்ளிகள் மற்றும் மண்டல அலுவலகத்தில், காலியாக உள்ள, எட்டு பதவிகளில், 683 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை, நவோதயா வித்யாலயா சமிதி வெளியிட்டுள்ளது.தணிக்கை உதவியாளர், சுருக்கெழுத்தர், ஹிந்தி மொழி பெயர்ப்பாளர், பெண் செவிலியர், கீழ் நிலை எழுத்தர், கிடங்கு காப்பாளர், ஆய்வக உதவியாளர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகிய பதவிகளில், ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பதவியில் சேர விரும்புவோர், டிச.,13க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விபரங்களை, www.nvshq.org / www.nvsnt2017.org என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக