லேபிள்கள்

22.11.17

ஒரு மதிப்பெண் தேர்வு: பள்ளிகளில் அறிமுகம்

மத்திய அரசின், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெறும் வகையில், 'ஒரு மதிப்பெண் தேர்வு' என்ற, புதிய பயிற்று முறை, அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில், மருத்துவம் படிக்க விரும்புவோர், 'நீட்' தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டு முதல், இது கட்டாயம் என்பதால், தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களை, நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்த, பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கேற்ப, பள்ளிகளில் கற்பித்தல் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறவும், நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவும், புதிய பயிற்று முறைகளை, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.
இதில், ஓர் அம்சமாக, ஒரு மதிப்பெண் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 
ஒவ்வொரு பள்ளிகளிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாடவாரியாக, ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும், கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகையில் சேர்க்கப்பட்டு, தினமும் மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. 'பாடத்தின் அனைத்து பகுதிகளையும், மாணவர்கள் படித்தால் தான், இந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெற முடியும். 'எனவே, இந்த தேர்வை அதிக அளவில் எழுதும் போது, 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகளில், 'அப்ஜெக்டிவ்' வகை கேள்விகளுக்கு, மாணவர்களால் எளிதில் பதில் அளிக்க முடியும்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக