தமிழக அரசுத்தேர்வு துறையை படிப்படியாக பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழக
கல்வித்துறையில், அரசு தேர்வுத்துறை ஒரு இயக்குனரின் தலைமையில் தனியாக செயல்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வு, செய்முறைத் தேர்வுகள் மட்டுமின்றி, எட்டாம் வகுப்பு, சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வுகள் உட்பட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது.இதன் கீழ் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உட்பட 7 மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
பள்ளிக் கல்விக்கு மாற்றம் : சமீபகாலங்களில் இத்துறையின் செயல்பாடுகள் அனைத்தும் படிப்படியாக கல்வித்துறைக்கு மாற்றப்பட்டு வந்துள்ளது. உதாரணமாக தேர்வுத்துறை செய்து வந்த, பொதுத் தேர்வு மாணவர் பெயர் பட்டியல் தயாரிப்பு பணியை தற்போது பள்ளிக் கல்வித்துறையே செய்து வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மற்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிளஸ்1 பொதுத் தேர்வையும், அவற்றின் செய்முறை தேர்வுகள் நடத்துவதையும், பின்னர் நடத்தும் தனித்தேர்வர்களுக்கான தேர்வையும் பள்ளிக் கல்வித்துறைதான் கவனித்து வருகிறது.
ஏற்கனவே விடைத்தாள் திருத்தும் பணியை நடத்தி முடிப்பதும் பள்ளிக்கல்வித் துறைதான்.
சான்றிதழ் சரிபார்ப்பு : தேர்வுத்துறையின் வசம் சான்றிதழ் சரிபார்க்கும் பணி மட்டுமே முக்கிய பணியாக இருந்துவந்தது. சமீபத்தில் இந்தப் பணியும் மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகள் வசம் சென்றுவிட்டது . தமிழகத்தில் அரசு பணிகளுக்கு நியமனம் செய்யப்படுவோரின் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணியை தேர்வுத்துறையினரே இதுவரை செய்து வந்தனர். இனி இதனை முதன்மை கல்வி அதிகாரிகளே மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு வசதியாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு பயன்படுத்தும் 'சாப்ட்வேரின்' முக்கியமான ரகசிய 'பாஸ்வேர்ட்' அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுத்துறையின் 90 சதவீதப் பணிகளும் தற்போது பள்ளிக் கல்வித்துறை வசம் சென்றுவிட்டன.
தேர்வுத்துறை ரத்தாகும் : இதைத் தொடர்ந்து இன்னும் ஓராண்டுக்குள் தேர்வுத்துறையை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைத்து, தேர்வுத்துறையை ரத்து செய்ய அரசு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக அரசு 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. தேர்வுத்துறையின் முன்னாள் துணை இயக்குனர் அந்தஸ்தில் இருந்த ஒரு அதிகாரியின் தலைமையில் குழு அமைத்து, ஆலோசனை நடத்தி, அரசுக்கும் கருத்துரு (புரபோசல்) அனுப்பப்பட்டுள்ளது. படிப்படியாக ஓராண்டுக்குள் தேர்வுத்துறை அலுவலர்கள் கல்வித்துறையுடன் இணைய உள்ளனர்.அரசின் எட்டாவது ஊதியக்குழு பரிந்துரையில் அரசு நிறுவனங்களில் சிக்கனம் கடைபிடிக்க வேண்டும். அதிக வேலைப்பளுவில்லாத துறைகள், ஊழியர்களை அதோடு இணைந்த துறைகளுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம்அலுவலகங்களின் வாடகை, ஊழியர் சம்பளம் உட்பட பலவகைகளில் சிக்கனப்படுத்த முடியும் என்ற ஆலோசனையின் பேரில் இந்த ஏற்பாடுகளை அரசு செயல்படுத்த உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக