லேபிள்கள்

24.11.17

நவீன மயமாகும் கேரள பள்ளிகள்

கேரளாவில் உள்ள பள்ளிகளில், 20 ஆயிரம் வகுப்பறைகளை, இன்னும் இரு மாதங்களுக்குள், நவீன மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளை, நவீன மயமாக்கும் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரள கட்டமைப்பு மற்றும் தொழில் கல்வி என்ற இந்த திட்டத்தில், 4,775 பள்ளிகளில் உள்ள, 45 ஆயிரம் வகுப்பறைகளை, 'லேப் - டாப்' உள்ளிட்ட கருவிகள் மற்றும் பல்வேறு வசதிகள் அடங்கிய, நவீன வகுப்பறைகளாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பள்ளிகளில் பெரும்பாலானவை, அரசு பள்ளிகள். இத்திட்டம், படிப்படியாக நிறைவேற்றப்பட உள்ளது.
இது குறித்து, இத்திட்டத்தை செயல்படுத்தும் துறையின் துணைத் தலைவரான, அன்வர் சதாத் கூறியதாவது:படிப்படியாக, இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக, ஜனவரிக்குள், 20 ஆயிரம் வகுப்பறைகள் நவீன மயமாக்கப்படும். இதற்காக, 43 ஆயிரத்து, 750 லேப் - டாப்கள் வாங்க, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக