லேபிள்கள்

22.11.17

புரட்சிக்கு வித்துடுமா புதிய வரைவு பாடத்திட்டம், கல்வியாளர்கள் கணிப்பு என்ன??

பேட்ரிக் ரெய்மாண்ட், பொதுச் செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, திண்டுக்கல்:
கலாசாரம், பண்முக தன்மை மற்றும் தமிழக சமய நல்லிணக்கம் பேணும் வகையில் இடம் பெற்ற மொழிப் பாடங்கள் வரவேற்கத்தக்கது. பயன்பாட்டு முறையிலான இலக்கணம் கற்பித்தல் என்ற புதிய விதிமுறை மூலம் மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தல் என்பது எளிதாகும். பாலினம் சமத்துவம், மாற்றுத்திறனாளிக்கு மாற்று கற்பித்தல் 
மற்றும் மதிப்பீட்டு முறை, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் படைப்புகளை பாடத்திட்டத்தில் இடம் பெற செய்த முயற்சி வரவேற்கத்தக்கது.
மெய்நிகர் வகுப்பறை (வெர்ச்சுவல் கிளாஸ்), திறன்மிகு வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) முறையால் கருவிகள் மூலமான கற்பித்தல் முறையில் கற்றலை முழுமையாக்கும் முயற்சியாக உள்ளது. தேர்வு பயத்தை போக்கும் வகையில் மாணவர்களின் அனைத்து திறன்களையும் மதிப்பிட மாற்று மதிப்பீட்டு முறை அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
பள்ளி மதிப்பீட்டு முறைகளில் ஓபன் புக், ஓபன் ரிசோர்சஸ் எனும் திறந்த வெளி புத்தக முறை மாணவர்களின் தேர்வு அச்சத்தை நீக்கி தன்னம்பிக்கையை வளர்க்கும். அறிவியலில் நானோ தவிர புதிய வரவுகள் குறைவாக உள்ளன. தமிழ், சமூக அறிவியல் தவிர அனைத்து வரைவுகளும் ஆங்கிலத்தில் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக