லேபிள்கள்

24.11.17

கல்வி முன்பணம் போக்குவரத்து கழகத்தில் நிறுத்தம்

குழந்தைகளின் கல்வி செலவுக்கான முன் பணத்தை வழங்காததால், போக்குவரத்து ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் குழந்தைகள் கல்விக்கு உதவும் வகையில், 5,000 ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டு வந்தது. இதை பெறும் ஊழியர்கள், வட்டியின்றி, 10 மாதங்களில் செலுத்துவர். இந்த முன்பணம், இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. இது, ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நேதாஜி தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: கல்வி முன்பணம் நிறுத்தப்பட்டது குறித்து, தகவல் பெறும் உரிமை சட்டத்தில், கேள்வி எழுப்பினோம். 13வது ஊதிய ஒப்பந்தத்தில், இதுகுறித்து பேசப்பட்டு வருவதாக, போக்குவரத்து துறையின் மனிதவள மேம்பாட்டுத்துறை, முதுநிலை துணை மேலாளர் பதில் அளித்து உள்ளார்.அதிகாரிகள் வேண்டுமென்றே, வழங்க மறுக்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக