லேபிள்கள்

31.12.17

மாணவர்களுக்கு சுற்றுலா: 100 பேர் தேர்வு

ஒவ்வொரு மாவட்டத்திலும், 100 மாணவர்களை தேர்வு செய்து, ஒரு நாள் சுற்றுலா அழைத்து செல்ல, உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களின் முக்கியத்துவம், வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், 50 மாணவர்கள், 50 மாணவியரை தேர்வு செய்து, ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், இரண்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், அருங்காட்சியகம், விலங்கியல், தாவரவியல் பூங்கா, வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், கோவில், அரண்மனை, பறவைகள் சரணாலயங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு, அழைத்து செல்லலாம். இதற்கு, ஏழாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, படிப்பில் சிறந்து விளங்கும், ஏழை, எளிய மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

கடற்கரை, நீர்நிலைகள், படகு பயணம், மலை ஏற்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக