'இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான ஆய்வு, பிப்., 1ல் துவங்கும்' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. இன்ஜி.,
கல்லுாரிகளை நடத்த, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற வேண்டும். அதேபோல, தொழில்நுட்பம், கட்டடக்கலை, மருந்தியல் மற்றும் மேலாண் படிப்புகள் நடத்தும் கல்லுாரிகளும், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெறுவது அவசியம். வரும் கல்வி ஆண்டில், அங்கீகாரம் பெறுவதற்கான, 'ஆன்லைன்' பதிவு, இன்று துவங்கி, வரும், 31ல் முடிகிறது. புதிய கல்லுாரிகள் தவிர, தற்போது செயல்படும் கல்லுாரிகளுக்கு, பிப்., 5 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அங்கீகாரம் வழங்குவதற்கான ஆய்வு பணி, பிப்., 1ல் துவங்கி, ஏப்., 10ல் முடிவடையும் என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக