லேபிள்கள்

6.1.18

பிளஸ் 2 அறிவியல் தேர்வு எழுத தனித்தேர்வர்களுக்கு அனுமதியில்லை

பிளஸ் 2 தனித்தேர்வர்கள், வரும் கல்வி ஆண்டு முதல், நேரடியாக அறிவியல் பாடத்தை எழுத முடியாது என, அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.
ஐந்து பாடப்பிரிவு : பள்ளிக்கு செல்லாமல், அனைத்து பாடங்களிலும், பிளஸ் 2 பொது தேர்வை எழுதி, தேர்ச்சி பெறும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு முதல், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, பிளஸ் 2 தேர்வை எழுத முடியும்.மேலும், அடுத்த கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2 தேர்வில், அறிவியல் பாடங்களை, நேரடியாக எழுத முடியாது. 
வரலாறு, பொருளியல்,அரசியல் அறிவியல், கணக்கு பதிவியல், வணிக கணிதம், வணிகவியல் என, ஐந்து பாடப்பிரிவுகளில் மட்டுமே, தனித்தேர்வு எழுத அனுமதிக்கப்படும்.

கூடுதல் விபரம் : எனவே, அடுத்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பங்கேற்க வேண்டும் என்றால், இந்த ஆண்டே பிளஸ் 1 தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். மேலும், இந்த ஆண்டு பிளஸ் 1 தேர்விலும், அறிவியல் தவிர்த்த, ஐந்து பாடப்பிரிவுகளில் மட்டுமே, தனித்தேர்வர்கள் தேர்வு எழுதலாம்.
இதற்கான அறிவிப்பை, அரசு தேர்வுத்துறை, நேற்று வெளியிட்டது.
பிளஸ் 1 எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், வரும், 8ம் தேதி முதல், 12க்குள், அரசு தேர்வுத்துறை சேவை மையத்திற்கு சென்று, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக