தலைமை செயலகத்தில், சார்பு செயலர், துணை செயலர் பதவியில் உள்ள, நுாற்றுக்கணக்கான அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவுப்படி,
பதவி உயர்வு வழங்காததால், கடும் மன உளைச்சலில் உள்ளனர். தலைமை செயலகத்தில், சார்பு செயலராக பணியாற்றிய சரஸ்வதி, தன்னை விட பணிமூப்பில் இளையவரான அய்யாவு, நிதித்துறையில் இணைச் செயலராக பணியாற்றியதால், தனக்கும் பதவி உயர்வு வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 2013ல் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், சரஸ்வதியின் ஊதியத்தை, அய்யாவு ஊதியத்திற்கு இணையாக உயர்த்த உத்தரவிட்டது. அதை எதிர்த்து, அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது; அதை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, சரஸ்வதியின் ஊதியத்தை, நிதித்துறை இணை செயலர் ஊதியத்திற்கு இணையாக உயர்த்தியதுடன், பதவி உயர்வும் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. அதேபோல், பணியில் மூத்தவர்களுக்கும், ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் தற்போது, சார்பு செயலர் முதல், அரசு செயலர் வரையிலான பதவிகளில் உள்ளனர்.
ஆனாலும், நீதிமன்ற உத்தரவுப்படி, அவர்களுக்கு, பதவி உயர்வோ, சம்பள உயர்வோ வழங்கப்படவில்லை. மாதம், 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் இழப்பு ஏற்படுவதால், கடும் மன உளைச்சலில் உள்ளனர். சரஸ்வதிக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு வழங்கியது போல, தங்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட அலுவலர்கள், தலைமை செயலரை சந்தித்து முறையிட்டனர். இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, அடுத்த கட்டமாக, போராட்டத்தில் ஈடுபட, முடிவு செய்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக