'பொது தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், இன்று முதல் தேர்வு மையங்களில், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, அக்டோ பரில் துணைத்தேர்வு நடந்தது. இதில், பங்கேற்றவர் களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், 'ஆன்லைனில்' ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
2016 மார்ச் முதல், தேர்வுக்கு பதிவு செய்து, நிரந்தர பதிவு எண் ஒதுக்கப்பட்டோரில், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மற்றவர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய பாடங் களுக்கு மட்டும், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த சான்றிதழ்களை, தேர்வு எழுதிய மையங்களில், இன்று முதல் தேர்வர்கள் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக