லேபிள்கள்

2.1.18

வருமான வரி தாக்கலுக்கு உதவி எண் அறிவிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு வசதியாக, பல்வேறு நடவடிக்கைகளை, வருமான வரித்துறை எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 'ஆன் லைன்' மூலமாக, வருமான வரி தாக்கல் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஆன் லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது, ஏதாவது குளறுபடி அல்லது இடையூறு ஏற்பட்டால், அது தொடர்பான சந்தேகங்களை போக்குவதற்கு, 18001030025 என்ற உதவி தொலைபேசி எண், புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பழைய எண்ணுக்கு பதிலாக, இந்த எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் பேசுவதற்கு கட்டணம் கிடையாது. இதே போல், 918046122000 எண்ணிலும் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும், வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக