லேபிள்கள்

3.1.18

அனுமதியின்றி சுற்றுலா : பள்ளிகளுக்கு தடை

தமிழகத்தில், அரையாண்டு தேர்வு முடிந்து, வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர, மற்ற வகுப்பு மாணவர்களை, சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. அதற்கான பணிகளை, பல பள்ளிகள் துவக்கியுள்ளன.

இதையடுத்து, 'அனுமதியின்றி மாணவர்களை, சுற்றுலா அழைத்து செல்லக் கூடாது' என, பள்ளிகளுக்கு, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை அதிகாரிகள அனுப்பியுள்ள கடிதம்: மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து, முன்அனுமதி பெற வேண்டும்.
கல்வித்துறை வகுத்துள்ள விதிகளை பின்பற்றி, மாணவர்களின் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஆபத்தான இடங்களுக்கு, சுற்றுலா அழைத்து செல்லக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக