லேபிள்கள்

13.4.18

''அரசுப்பள்ளியில் அற்புதக்கல்வி'' கல்வித்துறை தீவிர பிரசாரம்

அரசுப்பள்ளிகளில் அற்புதக்கல்வி' என்ற தலைப்பில் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து, மாணவர்களை சேர்க்க தொடக்க கல்வித்துறை பிரசாரம் செய்து வருகிறது.

பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் நிலையிலும், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. இந்த நிலையில், ''அரசுப் பள்ளியில் அற்புதக்கல்வி'' என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரம் வழங்கி மாணவர்களை சேர்க்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தரமான கல்வி, இலவச ஆங்கில வழிக்கல்வி, எளிய செயல் வழிக்கற்றல், படைப்பாற்றல் வழிக்கற்றல், ஆங்கிலம் பேசும் திறனை வளர்த்தல், இலவச கணினி, கணினி பயிற்சி, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு பயிற்சி அளிக்கப்படுவதாக அந்த துண்டுபிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதவி தொடக்க கல்வி அலுவலர், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகங்கள் சார்பில் இவை பொதுமக்கள் கூடும் இடங்களில் வினியோகிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக