லேபிள்கள்

8.4.18

பிளஸ் 1 மாணவர்களுக்கும், 'நீட்' இலவச பயிற்சி அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு, 'ஜாக்பாட்

'நீட்' தேர்வுக்கான இலவச பயிற்சியில், பிளஸ் 1 மாணவர்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் முடிந்து உள்ளன. இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், இலவசமாக, நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. 

இந்த பயிற்சி வகுப்புகள், நாளை துவங்குகின்றன.மாநிலம் முழுவதும், 412 மையங்களில், நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சிக்காக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 72 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். 
இவர்களில், 70 ஆயிரம் பேர் பயிற்சிக்கு வந்தனர். அவர்களிலும், நீட் தேர்வுக்காக, 9,000 மாணவர்கள் மட்டுமே, ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர்.இந்த, 9,000 மாணவர்களுக்கு மட்டும், நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மாநிலம் முழுவதும், 412 மையங்களில், நாளை முதல் சிறப்பு வகுப்பு கள் துவங்க உள்ளன. 
அதுமட்டுமின்றி, இந்த மாணவர்களில், 4,000 பேருக்கு, வரும், 9 முதல், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள, எட்டு கல்லுாரிகளில், உண்டு, உறைவிட வசதியுடன், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இதனால், 9ம் தேதிக்கு பின், 412 மையங்களில், நீட் தேர்வு பயிற்சிக்கு, ஒரு வகுப்புக்கு சராசரியாக, 10 மாணவர்கள் மட்டுமே இடம் பெறுவர். எனவே, இந்த மையங்களை பயன் உள்ளதாக மாற்றும் வகையில், பிளஸ் 1 மாணவர்களையும், நீட் தேர்வு பயிற்சியில் பங்கேற்க வைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுஉள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளை சேர்ந்த, பிளஸ் 1 மாணவர்கள், விருப்பப்பட்டு நீட் பயிற்சி மையத்திற்கு வந்தால், அவர்களையும் பயிற்சி வகுப்பில் அனுமதிக்கும்படி, மைய பொறுப்பாளர் களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக