லேபிள்கள்

10.4.18

8,212 மாணவர்களுக்கு 'நீட்' பயிற்சி துவக்கம்

 ''நீட் தேர்வு மையங்களில், 8,212 மாணவ, மாணவியருக்கு பயிற்சி துவங்கியுள்ளது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு, நந்தா பொறியியல் கல்லுாரியில், அரசு சார்பில் 'நீட்' தேர்வு மைய பயிற்சி துவக்க விழா நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர்,
செங்கோட்டையன், 220 மாணவ - மாணவியருக்கு இலவச,'லேப் - டாப்' வழங்கி, பயிற்சி மையத்தை துவக்கி வைத்து பேசியதாவது:தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரியில், 2,502, தனியார் கல்லுாரிகளில், 4,200 என, 6,702 இடங்கள் உள்ளன. 'நீட்' தேர்வு மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியர் அதிக எண்ணிக்கையில் மருத்துவ கல்லுாரியில் இடம் பெறும் வகையில், பயிற்சி வழங்கப்படுகிறது.மாநில அளவில், 412 மையங்கள் அமைக்கப்பட்டு, தற்போது ஒன்பது மண்டலங்களில், 8,212 பேருக்கு பயிற்சி தொடங்கியுள்ளது. இதில், 902 மாணவர்கள், ௧,902 மாணவியருக்கு, உணவு, விடுதி வசதி ஏற்படுத்தி, 21 நாட்கள் தங்கி படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பிற மாணவர்களுக்கு படிப்படியாக, பயிற்சி வழங்கப்படும்.வரும் ஆண்டில் புதிய பாடத்திட்டத்தில், மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படும். இதற்காக, 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் பயிற்சி வழங்கப்படும். போராட்டம் நடத்தும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை அழைத்து பேசி, தேவை பூர்த்தி செய்யப்படும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக