லேபிள்கள்

8.4.18

'நீட்' பயிற்சி மாணவர் உணவு செலவு 'கையை பிசையுது' கல்வி துறை

நீட் ' தேர்வுக்கான உண்டு உறைவிடப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உணவு செலவிற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால் நன்கொடை பெற கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களை 'நீட்'தேர்விற்கு தயார் செய்ய அரசு சார்பில் 'தொடுவானம்' பயிற்சி மையம் துவக்கப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பித்த எட்டாயிரத்து 233 மாணவர்களுக்கு, ஒன்பது மாவட்டங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகளில் 'விரைவு பயிற்சி' அளிக்கப்பட உள்ளது. 
நாளை (ஏப்., 9) துவங்கி மே 6 வரை பயிற்சி நடக்கிறது. ஒவ்வொரு மையத்திலும் 350 முதல் 400 மாணவர்கள் பயிற்சி பெறுவர். தினமும் உணவுக்கு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் அரசு இதற்கு நிதி ஒதுக்கவில்லை.
நேற்று திண்டுக்கல்லில் 'நீட்' பயிற்சி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் சீனிவாசனிடம், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பரமசிவம், ''திண்டுக்கல் மைய உணவு செலவிற்கு ரூ.16 லட்சம் தேவைப்படும். இதில் ரூ.6 லட்சம் நான் கொடுக்கிறேன். மீதியை அமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என கோரினர். உடனே நிதி வழங்குவதாக தெரிவித்த அமைச்சர் சீனிவாசன் பின், ''இதுபோன்ற நல்ல விஷயங்களுக்கு ஏராளமானோர் நன்கொடை தருவர். நன்கொடையாளர்களை அதிகாரிகள் அணுகலாம்,'' என நழுவினார்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, 'உணவு செலவுக்கு நன்கொடை பெற முடிவு செய்துள்ளோம்' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக