பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் விடைகளுக்கு, தேர்வுத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதனால், விடை சரியாக இருந்தாலும், மதிப்பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் கூறியதாவது: விடைத்தாள் திருத்துவதில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, மதிப்பெண் வழங்குவதற்கு, புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. அதாவது, ஒரு மதிப்பெண் வினாக்களில், 'அப்ஜெக்டிவ்' என்ற, கொள்குறி வகையில், நான்கு விடைக்குறிப்புகள் வழங்கப்படும். அந்த நான்கு குறிப்புகளில், சரியானதை மாணவர்கள் எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்வி எண்ணுக்கும் எதிரில், அதற்கான சரியான விடையை, மாணவர்கள் எழுதுவர். சிலர், சரியான விடை எது என்பதை, 'ஏ அல்லது பி' என, 'ஆப்ஷனை' மட்டும் குறிப்பிடுவர். சிலர், ஆப்ஷன் எழுதாமல், விடையை மட்டும் குறிப்பிடுவர்.ஆனால், இந்த ஆண்டில், ஆப்ஷன் குறியீட்டையும், விடையையும் சேர்த்து எழுதாவிட்டால், மதிப்பெண் வழங்க வேண்டாம் என, தேர்வுத் துறை கூறியுள்ளது.ஆனால், பெரும்பாலான மாணவர்கள், ஏதாவது ஒன்றை தான் எழுதி உள்ளனர். அவர்களுக்கு மதிப்பெண் கிடைக்காது. இதனால், 90 சதவீத மாணவர்களுக்கு, 20 - 30 மதிப்பெண்கள் கிடைக்காமல் போகலாம். இது குறித்து, அமைச்சர், செயலர், தேர்வுத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி, ஒரு மதிப்பெண் விடைக்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஒரு மதிப்பெண் வினாவுக்கு, ஆப்ஷன் குறியீடு மற்றும் சரியான விடை என, இரண்டையும் சேர்த்து எழுத வேண்டும் என, வினாத்தாளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. 'வினாத்தாளை படிக்க, 10 நிமிடம், கூடுதல் நேர சலுகை வழங்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது, விதிகளை, மாணவர்கள் பின்பற்றாவிட்டால், மதிப்பெண் கிடையாது. இதில், எந்த மாற்றமும் இல்லை' என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக