தொடக்க கல்வி ஆசிரியர் பதவிக்கான, டிப்ளமா தேர்வுக்கு, வரும், 16ம் தேதி
முதல், தனித்தேர்வர்கள் பதிவு செய்ய லாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர தேவையான, டிப்ளமா
படிப்புக்கான தேர்வு, ஜூன், 4 முதல், 21 வரை நடக்க உள்ளது. இந்த தேர்வில்
பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், ஏப்., 16 முதல், 21 வரை
விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள், தங்கள் விபரங்களை,
http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில், ஆன்லைனில் பதிவு
செய்ய வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக