லேபிள்கள்

22.10.13

தொடக்கக் கல்வி துறையில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவு

தொடக்கக்கல்வித்துறையில் பொது மாறுதல் கலந்தாய்வின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் நிர்வாக மாறுதல் குறித்து பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தது. மேலும் இப்பிரச்சனையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை மற்றும் வத்தலக்குண்டு ஒன்றியங்களில் 2013-14ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை.
இப்பிரச்சனை குறித்து ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசுக்கும், இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து மேற்காணும் ஒன்றியங்களில் ஆசிரியர்களின் எதிர்ப்பால் தடைப்பட்ட கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக