லேபிள்கள்

20.10.13

இராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் இராணுவ பள்ளிகளில் (Army Public School-APS)  ஆசிரியராக பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண்: B/45706/CSB-13/AWES

பணிகள்:

1.Post Graduation Teachers (PGT)

2.Trained Graduate Teachers (TGT)

3.Primary Teachers (PRT)

கல்வித்தகுதி: (PGT) 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஆங்கிலம், இந்தி, வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உயரி தொழில்நுட்பவியல், உளவியல் வணிகவியல், கணினி அறிவியல், தகவல் தொழிற்நுட்ப அறிவியல், மனை அறிவியல் (Home Science) உடற்கல்வியியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: (TGT/PRT) 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.04.2014 தேதிப்படி ஆசிரியர் பணியில் அனுபவம் இல்லாதவர்கள் 40-க்குள்ளும் குறைந்தது 5 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் 57 வயது வரையும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தில்லியில் உள்ள இராணுவ பள்லிகளில் ஆசிரியராக பணியாற்ற விரும்பினால் (TGT/PRT) பணிக்கு 29-க்குள்ளும், PGT பணிக்கு 35 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் ஆசிரியர் பணி திறமை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு கொள்குறிவகை வினாக்கள் கொண்டதாக இருக்கும்.

எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம்: PGT/TGT: Paper -I General Awarness/Mental ability/English Comprehension/Educational Concepts and Methodology.

Paper-II Main Subjects

PRT - பணிக்கு Paper -I தேர்வு மட்டும் நடைபெறும். ஒவ்வொரு தாளிலும் 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். தலா 90 நிமிடம் தரப்படும். தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்படும்.

தேர்வு நடைபெறும் தேதி: 08.12.2013

தமிழகத்தில் ஆன்லைன் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை மற்றும் கோயம்புத்தூர்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை Credit Card/Debit Card/Net Banking முறையை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.awesindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2013

குறிப்பு: ஆன்லைனில் விண்ணப்பித்தபின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Admit Card- பதிவிறக்கம் செய்து எழுத்துத் தேர்வுக்கு வரும் போது கொண்டு வரவும்.

Admit Card - 11.11.2013 முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பற்றிய விவரம் 23.12.2013 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.

எழுத்துத்தேர்வு தொடர்பான விவரம் மின்னஞ்சல்/SMS மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும்.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.awesindia.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக