பட்டதாரி
ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில/ மாவட்ட நிர்வாகிகளுக்கு வணக்கம்
இயக்கப் பணியில் தொடர்ந்து தோள் கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. கடந்த 03.07.2013 அன்று தென்காசியில் எழுச்சியுடன்
நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.
இயக்கப் பணி என்பது யாரோ ஒருவரின் பணி என்று நினைத்துக் கொண்டு , கூட்டம் நடப்பதாக அழைப்பு வந்தால் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அமைதியாக
இருந்துவிடும் பலரும் நம்முடன் இருக்கிறார்கள். இயக்கத்தால் பதவி உயர்வு, சலுகைகள்
கிடைத்தால் முதலில் வருவதும், இயக்கப்பணியெனில் அமைதி காத்திடும் நல்லவர்களுக்காகவும்
தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
எது எப்படி
இருப்பினும் தோள் கொடுக்கும் சில நண்பர்களின் இயக்கப்பணிதான் நம் முதுகெலும்பை நிமிர்த்தி
வைத்திருக்கிறது.கடந்த ஆண்டிற்கான உறுப்பினர் சந்தா, டைரி நிலுவை முடிக்காத ஒன்றியப்
பொறுப்பாளர்கள் இம்மாத இறுதிக்குள் பழைய நிலுவைத்தொகையினை
அனுப்பிடக் கேட்டுக்கொள்கிறோம்
இந்த கல்வியாண்டிற்கான உறுப்பினர்
சந்தா, ஆசான் மடல் சந்தா புத்தகம் மாநில செயற்குழுவில் வழங்கப் பட்டுள்ளது. கூட்டத்தில்
கலந்து கொள்ளாத, வட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர் சந்தா, ஆசான் மடல் சந்தா புத்தகங்களை
பெற்றுக்கொண்டு நவம்பர் முதல் வாரத்திற்குள் உறுப்பினர் சேர்க்கையை முடித்திட கேட்டுக்கொள்கிறோம்
Ø செயற்குழு முடிவின்படி இந்த ஆண்டிற்கான
உறுப்பினர் சந்தாத் தொகை ரூ 200 ஆக உய்ர்த்தப்பட்டுள்ளது. மாநில பங்குத்தொகை ரூ100,
மாவட்ட பங்குத் தொகை ரூ 50, வட்டார பங்குத்
தொகை ரூ 50ஆகும்.ஆசான் மடல் சந்தா செப்டம்பருடன் (2013) முடிவடைகிறது. காலதாமதத்தை
தவிர்க்கும் வகையில் மடல் சந்தா ரூ 75 னை வட்டார பொறுப்பாளர்கள் நேரடியாக பொதுச்செயலாளருக்கு
அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம்
Ø ஆசான் மடல் சந்தாதாரர்களின் முகவரியை இந்த மெயிலுடன் இணைக்கப்பட்டுள்ள FORMAT படி அனுப்பிடக்
கேட்டுக்கொள்கிறேன்.கண்டிப்பாக PINCODE குறிப்பிட வேண்டும். பள்ளியின் பெயரை குறிப்பிடும்
போது PUMS / GHS எனக்குறிப்பிடாமல் முழுமையான பெயரை குறிப்பிட வேண்டும்.முகவரியை
ஆங்கிலத்தில் மட்டும் அனுப்பிடவும். ஆசான்
மடல் பல புத்தகங்கள் சரியான முகவரி அனுப்பாததால் திரும்ப வந்துகொண்டிருக்கின்றன. வரும்
அக்டோபர் மாதம் முதல் சந்தா புதுப்பிக்காதவர்களுக்கு ஆசான் மடல் அனுப்ப இயலாது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
மாநில பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு
உறுப்பினர் சந்தாவை விரைவு படுத்திட வேண்டும்.
Ø உறுப்பினர் சந்தாவினை அக்டோபர்
இறுதிக்குள் முடித்து நவம்பர் மாதம் நடைபெற உள்ள மாநில செயற்குழுவில் அடிக்கட்டையுடன்
ஒப்ப்டைத்திட இப்போதே பணிகளித் துவங்குங்கள். CRC க்காக காத்திராமல் ஆசிரியர்களை பள்ளிகளில்
சந்தித்து உறுப்பினராக்குங்கள். அவர்களின் தீர்க்க வேண்டிய பிச்சினைகள் இருப்பின் வட்டார,
மாவட்ட குறைதீற் கூட்டங்களில் அதிகாரிகளைச் சந்தித்து களைந்திடுங்கள். அவ்வாறு தீர்க்க
இயலாத நியாயமான கோரிக்கைகளை மாநில அமைப்பிற்கு
தெரியப்படுத்துங்கள்.
Ø PG வழக்கு குறித்த விவரங்க்கள்
வரும் நிர்வாகக் குழுவில் தெரியப்படுத்தப்படும்.நிதி வழங்க்காத மாவட்டங்க்கள் மனது
வைத்தால் வழக்கினை விரிந்து முடித்திடலாம். ஆசிரியர்களிடம் எடுத்துக்கூறி நிதி பெற்றுத்தாருங்கள். இவ்வாண்டும் இயக்கத்தின் சார்பில் டைரி, அரசாணைத்தொகுப்பு
வெளியிடப்பட உள்ளது, தங்கள் மாவட்ட வட்டார பொறுப்பாளர்களின் சரியான முகவரிகளையும் தயாராக வைத்திட கேட்டுக்கொள்கிறோம்
உங்கள் சிந்தனைக்கு…
·
தொடக்கக்
கல்வித்துறையில் நமது நீண்ட நாள் கோரிக்கைகளான Cps account slip கிடைப்பதற்கான அரசின்
பணி நமது தொடர் முயற்சியே
·
PG
பதவி உயர்வு குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் நமது முற்சியை மாற்று சங்கங்களும்
பாராட்டும் முயற்சியும் செய்ல்பாடும் நம்முடையதே
·
M.PHIL
ஊக்க ஊதியம் பெற்றுத்தர எந்த தொடக்க நிலை சங்கமாவது குரல் கொடுத்தது உண்டா?
·
பணிநாள்
முதல் காலமுறை ஊதியம் வேண்டும் எனும் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று
அது தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளதே இது யாருக்காக செய்த பணி ?
·
CPS
முறையை இரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் கொண்ட நம் போராட்டம் வேறு யாரும்
செய்யாதது. பத்தோடு ஒன்றாக அல்ல அதை மட்டும் முன்னிறுத்திய நிகழ்வு அனைத்து சங்கங்களுக்கும்
ஒரு முன்னோட்டம், சட்ட பையிலும் இதை பேச வைத்தோம. இதன்பிற்குதான் எல்லா சங்கங்களும்
CPS ஐ முதன்மைக் கோரிக்கையாக்கினர்.ஆனால் இப்போராட்டம் இரண்டு மாவட்டங்களோடு நின்று
போனதா? ஏன் மற்ற மாவட்டங்கள் இதைத் தொடர யோசிக்கிறார்கள். நிகழ்கால வாழ்வைத்தொலைத்துத்து
விட்டு எதிர்கால தலைமுறையை தெருவில் நிறுத்தும் மத்திய அரசின் போக்குக்கு முடிவு கட்ட
வேண்டாமா ? மற்ற மாவட்டங்கள் ஏன் மவுனமாய்
இருக்கிறார்கள். நெல்லை, கோவை, திருப்பூர், விழுப்புரம் ,திருச்சி, தேனி உள்ளிட்ட மாவட்ட
பொறுப்பாளர்களும் விரைவில் கவன ஈர்ர்ப்பு உண்ணா விரத்ததை நடத்திட கேட்டுக் கொள்கிறோம்.
·
கடந்த
கால நிகழ்வுகளில் ஆசிரியர்களின் பிரச்சினைகளை
முதலில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனைத் தீர்க்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு
வருவது நாம் தான் , அதனையடுத்தே பிறரின் முயற்சி
என்பதை மறவாதீர்கள். உற்சாகமாய் இயக்கப்பணியாற்றுங்கள். வெற்றி நமதே.
R.ஆனந்த கனேஷ் பீ.பேட்ரிக்
ரெய்மாண்ட்
(மாநிலத் தலைவர் ) (பொதுச்
செயலாளர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக