லேபிள்கள்

20.10.13

ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க கல்வித்துறை ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில்இருவேறு நிலைபாடு உள்ளதால்குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவற்றை களைய,விடுமுறை நாட்களில்பயிற்சி வழங்குவதைமறுபரிசீலனை  செய்ய வேண்டும்என,  கோரிக்கை எழுந்துள்ளது
.தமிழகத்தில், 32மாவட்டங்களில், 385 யூனியன்கள் உள்ளன. அவற்றில், 3,700க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி, 9,938க்கும் அதிகமான நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. அதில்இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில்அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம்பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வட்டார வளமையம் மூலம்இப்பயிற்சி வழங்கி வருகிறது.தமிழகத்தில், 385 வட்டார வளமையங்கள் உள்ளன. அவற்றை நிர்வகிக்க மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர். மேலும்ஒவ்வொரு யூனியன்களிலும்குறைந்தது ஆறு குறுவள மையங்கள் செயல்படுகிறது. கடந்த, 2002ம் ஆண்டு முதல்மாதந்தோறும்முதல் சனிக்கிழமைதுவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும்இரண்டாம் சனிக்கிழமைநடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு வரைமாதத்துக்குஒரு நாள் எனபத்து நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பத்து நாட்களும்பள்ளி வேலை நாட்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. தற்போதுமூன்று பருவத்துக்கும்தலாஒரு பயிற்சி வீதம் மூன்று நாட்கள் மட்டுமே வழங்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.மேலும்வட்டார வளமையம் மூலம் ஆண்டுக்கு, 20நாட்கள் வழங்கப்பட்டு வந்த பயிற்சியானதுவெறும் நான்கு நாட்களாக குறைக்கப்பட்டது. இப்பயிற்சியில், 40 சதவீதம் ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்கவும், 60 சதவீதம் ஆசிரியர்கள் பள்ளி நடத்தவும் உத்தரவிடப்பட்டது.தற்போதுமுதல் பருவத்துக்குஒரு குறுவளமைய பயிற்சியும்ஒரு வட்டார வளமையப் பயிற்சியும் வழங்கப்பட்டது. அந்த பயிற்சி நடந்த இரண்டு நாட்களும், 40சதவீத ஆசிரியர்கள் பயிற்சியிலும், 60 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கும் சென்றனர். இந்நிலையில்குறுவளமையம் நடக்கும் மூன்று நாட்களையும்பள்ளி வேலை நாட்களாகஅரசு அறிவித்துள்ளது.

ஆனால்வட்டார வளமையத்தில் வழங்கப்படும் பயிற்சி நாள்,விடுமுறை நாளாக அறவிக்கப்பட்டது. மேலும்தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெறும் நாள் பள்ளி வேலை நாளாகவும்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெறும் நாள்பள்ளி விடுமுறை எனவும்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதுஆசிரியரை குழப்பம் அடையச் செய்துள்ளது.தற்போதுசனிக்கிழமை சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பயிற்சி வழங்கப்பட்டது. அதில், 40சதவீத ஆசிரியர்கள் பயிற்சிலும், 60 சதவீத ஆசிரியர்கள் விடுமுறையிலும் உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவேஅரசு விடுமுறை நாளான சனிக்கிழமை பயிற்சி வழங்குவதை,எஸ்.எஸ்.ஏ.மறுபரிசீலனை செய்துபள்ளி வேலைநாட்களில் இதுபோன்ற பயிற்சியை வழங்க வேண்டும்.மேலும்விடுமுறை தினமாக சனிக்கிழமை அன்று பயிற்சியில் கலந்து கொள்ளும், 40சதவீத ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க கல்வித்துறை ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக