பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்
2 பொதுத்
தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, இந்தாண்டு முதல்
சிறப்புத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது,'' என்று,
பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.
மதுரையில் அவர்
கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறையில் தணிக்கை தடைகள்
ஏற்படாமலும், நிர்வாக ரீதியாகவும் தலைமையாசிரியர்களின் பணி
எவ்வாறு அமைய
வேண்டும் என்பது
குறித்து தணிக்கை அதிகாரிகளுடன் மதுரையில் ஆலோசனை
நடத்தப்பட்டது. இதுகுறித்து அனைத்து தலைமையாசிரியர்களுக்கும், சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்
2 அரசு
பொதுத்
தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, கல்வித் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக, பள்ளிகளுக்கு சென்று
மாணவர்களுக்கு சிறப்பு "கவுன்சிலிங்' அளிப்பதற்காக, 10 "மொபைல்' வேன்கள் துவக்கப்பட்டுள்ளன. தேர்வில் குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பது இந்த
"கவுன்சி லிங்'
முறையால் தவிர்க்கப்படும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற
மாணவர்கள் (ஸ்லோ
லேனர்ஸ்) பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாடவாரியாக சிறப்பு கையேடுகள் தயாரித்து வழங்கவும், 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற
பள்ளிகளில் இருந்து சிறப்பு ஆசிரியர்கள் குழு
ஏற்படுத்தி, சிறப்பு வகுப்புகள் நடத்தும் திட்டம் இந்தாண்டு செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, மாவட்ட
அளவில்
சிறப்பு ஆசிரியர்கள் குழுக்கள் ஏற்படுத்தப்படவு உள்ளன.
மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 வகையான
நலத்திட்ட பொருட்களை வைப்பதற்கு மாவட்டங்கள் தோறும்
அரசு
குடோன்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற
கோரிக்கை குறித்து ஆய்வு
செய்யப்படும். மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில், ஆண்
ஆசிரியர்களும், மாணவிகள் மட்டும் படிக்கும் பள்ளிகளில், ஆசிரியைகளை மட்டும் நியமிக்க வேண்டும் என்ற
அரசு
உத்தரவு, நடப்பாண்டு முதல்
தீவிரமாக்கப்படும். இதன்மூலம் ஆசிரியர்கள்- மாணவர்கள் இடையே
இணக்கமான சூழ்நிலை ஏற்படும். மாநிலம் முழுவதும் 650 உயர்
நிலைப்
பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இதுதொடர்பான வழக்கு
கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
எனவே
கோர்ட்
உத்தரவிற்கு பின்
தான்
நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். முன்னதாக, சென்னை,
கோவை,
மதுரை
ஆகிய
மண்டலங்களின் தணிக்கை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடந்தது. தணிக்கைத் துறை
நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் டென்சன் முன்னிலை வகித்தார். மதுரை
மாவட்ட
முதன்மை கல்வி
அலுவலர் அமுதவல்லி, மாவட்ட
கல்வி
அலுவலர் ஜெயமீனா தேவி,
தொடக்கக் கல்வி
அலுவலர் சுப்பிரமணியன் உட்பட
பலர்
கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக