லேபிள்கள்

26.10.13

பள்ளியில் உள்ள மோட்டாரை இயக்கிய அரசு நடுநிலைப் பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி பலி

திருத்தணி அருகே வேலஞ்சேரி அரசு நடுநிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் தனசேகரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். பள்ளியில் உள்ள மோட்டாரை இயக்கிய போது தனசேகரை மின்சாரம் தாக்கியுள்ளது.
அரசு நடுநிலைப் பள்ளியை முற்றுகையிட்டு தனசேகரனின் பெற்றோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவனை மோட்டாரை இயக்கக் கூறிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனசேகரனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களிடம் திருத்தணி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக