நமது TNGTF மாநில
பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மெண்ட் மற்றும் மாநில தலைவர் ஆனந்தகணேஷ், பொருளாளர் செல்லையா,
தலைமை நிலைய செயலாளர் எலிசா ஆகியோர் கடந்த 21.10.13 திங்கள் அன்று தொடக்க கல்வி இயக்குநர்,
பள்ளிக் கல்வி இயக்குநர், மற்றும் அரசு தேர்வு துறை இயக்குநர் ஆகியோரை சந்தித்து நமது
கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியுள்ளனர்.
தொடக்கக் கல்வி இயக்குநர் சந்திப்பின்
போது;
1.
தற்போது
தொடக்க, உயர்தொடக்க குறுவள பயிற்சி வகுப்புகள் பல மாவட்டங்களில் பள்ளி விடுமுறை நாட்களில்
நடத்தப்படுவதால், உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு
ஈடுசெய்யும் விடுப்பு வழங்கப்படுவது போன்று தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும்
ஈடுசெய்யும் விடுப்பு வழங்க வேண்டும் என பொதுச்செயலாளர் இயக்குநர் அவர்களிடம் கூறினார்.
அதனை இன்முகத்துடன் கேட்ட தொடக்கக் கல்வி இயக்குநர்
SPD யிடம் இதுகுறித்து அலோசித்து உத்தரவு வழங்குவதாக கூறியுள்ளார்.
2.
தொடக்கக்
கல்வி துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
பதவி உயர்வு வழங்கும் வகையில் அரசு ஆணை வெளியிட பரிந்துரைக்க வேண்டும் என பொதுச்செயலாளர்
இயக்குநர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். அதனை இன்முகத்துடன் கேட்ட தொடக்கக் கல்வி இயக்குநர்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்
என்று தங்கள் அமைப்பு மட்டுமே கோரிக்கை வைக்கிறீர்கள்? மற்ற அமைப்புகள் இதை பற்றி என்னிடம்
பேசவில்லையே? என கூறியுள்ளார். அதற்கு நமது செயலாளர் நாங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளோம்
எனவே நாங்கள் தான் இதை பற்றி தங்களிடம் முறையிடுகிறோம் என கூறி 2004 முதல் இன்று வரை நமது TNGTF அமைப்பு இதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகளை
பொதுச்செயலாளர் இயக்குநர் அவர்களிடம் எடுத்து கூறினார். அதனை இன்முகத்துடன் கேட்ட இயக்குநர்
இது குறித்து அலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக
தனது குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொண்டார்.
3.
விருதுநகர்
உட்பட சில மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil பட்டத்துக்கு ஊக்க ஊதியம்
வழங்க மறுக்கப்படுவது குறித்து செயலாளர் இயக்குநரிடம் கூறிய போது உடனடியாக தொலைபேசியில்
சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil
பட்டத்துக்கு ஊக்க ஊதியம் வழங்க அறிவுறுத்திய இயக்குநர் அவர்களுக்கு நமது அமைப்பு நன்றியை
தெரிவித்து கொள்கிறது.
4.
இரட்டை
பட்ட வழக்கின் காரணமாக பட்டதாரி ஆசிரியர்கள்
ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்ட மாறுதல் நடைபெறததால் ஆசிரியர்கள் மனவேதனை
அடைந்துள்ளனர் எனவும், எனவே ஆங்கில பட்டம் பெற்ற ஆசிரியர்கள் இவ்வழக்கை நடத்துவதால்
ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தவிர்த்து பிற பணியிடங்களுக்கு ஒன்றிய மாறுதல்,
மாவட்ட மாறுதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என பொதுச்செயலாளர் இயக்குநர் அவர்களிடம் கோரிக்கை
விடுத்தார். அதனை இன்முகத்துடன் கேட்ட தொடக்கக் கல்வி இயக்குநர் இது குறித்து உயர் அலுவலர் மற்றும் அரசு வழக்கறினரிடமும் அலோசித்து
விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
5.
மேலும் அறிவியல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம்
அறிவியல் பட்டதாரி ஆசிரியருக்கு வழங்குமாறும் இயக்குநரிடம் கோரப்பட்டது.
பள்ளிக்கல்வி இயக்குநர் சந்திப்பின்
போது;
1.
பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்து
ஆசிரியர் சங்க கூட்டத்தில் நமது பொதுச்செயலாளர் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்
முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் குறிப்பிட்ட அளவு பணியிடங்களுக்கு நடுநிலைப்பள்ளிகளில்
பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என பேசி இருந்தார்,
அதனை நமது பொதுச்செயலாளர் பள்ளிக்கல்வி இயக்குநரிடம் மீண்டும் நினைவு கூர்ந்து நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கூறினார். அதனை இன்முகத்துடன்
கேட்ட பள்ளிக் கல்வி இயக்குநர் உயர் அலுவலர்களுடன் அலோசித்து நடவடிக்கை எடுப்பதாக
கூறினார்.
செய்தி; எஸ். எலிசா, TNGTF தலைமை நிலைய செயலாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக