ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்க கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு தள்ளிவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் பழனிமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. இதில் 150 மதிபெண்ணில் 90 மதிப்பெண் பெற்றால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் பலர் தோல்வி அடைந்து விடுகிறார்கள். இதனால் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைஜாதியினருக்கு என்று மதிப்பெண்ணில் தளர்வு அளிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோர், மலை ஜாதியினருக்கு மதிப்பெண் சலுகை அளித்து வருகிறது. ஆகவே தமிழகத்திலும் இந்த மதிப்பெண் தளர்வு அளிக்க கோரி அரசுக்கு மனு கொடுத்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே உயர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் வழக்கில் கூறியிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் நேற்று இறுதி விசாரணை நடத்தினர். அப்போது வக்கீல் பழனிமுத்து ஆஜராகி, தகுதிதேர்வு எழுதிய 19 ஆயிரம் பேரை தேர்வு செய்து தேர்வில் வெற்றி பெற்றதாக கூறி பணியும் வழங்கிவிட்டனர். இதை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் சோமையாஜி , அரசு சிறப்பு வக்கீல் கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி, தகுதி தேர்வில் மதிப்பெண்ணில் தளர்வு அளிக்க முடியாது என்றனர். அதை கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக