லேபிள்கள்

6.1.14

நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை

நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை
வெள்ளகோவில், ஜன.6-
திருப்பூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் செயற்குழு கூட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை மாவட்ட செயலாளர் தனபால் வரவேற்றார். கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இந்திராணி தலைமை தாங்கினார்.
மாநிலத்தலைவர் ஆனந்த கணேஷ், செயலாளர் முதலியப்பன், துணை பொது செயலாளர் முகமது அயூப், ஜெனட் பொற்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பேசினார்.
இதில் கோவை, ஈரோடு, மாவட்ட நிர்வாகிகளும், பல்லடம், ஊத்துக்குளி, வெள்ளகோவில், அவினாசி, குடிமங்கலம், திருப்பூர் ஆகிய ஒன்றிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். முடிவில் விநாயக மூர்த்தி நன்றி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு துறைவேறுபாடு கருதாமல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விழுப்புரத்தில் உண்ணாவிரதம் இருப்பது என்பது உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக