லேபிள்கள்

10.1.14

உதவி தலைமையாசிரியரை தாக்கிய மாணவர்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 86 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். வைரவரத்தினம் (51) உதவி தலைமையாசிரியராக பணிபுரிகிறார். இவர் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார். இதில், வினோத் (17) பொருளாதார பிரிவில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக வினோத் பள்ளிக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனை உதவி தலைமையாசிரியர் வைரவரத்தினம் கண்டித்துள்ளார். 

நேற்று, பெரிய கோயில் அருகிலுள்ள தனது வீட்டில் மதிய உணவு முடித்துவிட்டு ஆசிரியர் வைரவரத்தினம், மாலை 3 மணியளவில் டூவீலரில் பள்ளிக்கு திரும்பினார். அப்போது வைகையாற்றின் கரையோரம் வினோத் உட்பட சில மாணவர்கள் சேர்ந்து வைரவரத்தினத்தை மறித்தனர். எங்களை கண்டித்து விட்டு நீங்கள் மட்டும் எப்படி தாமதமாக போகலாம் என கேட்டு தகராறு செய்து, பீர் பாட்டிலை எடுத்து தாக்கியுள்ளனர். இதில் ஆசிரியரின் மண்டை உடைந்தது. மதுரை மருத்துவமனையில் வைரவரத்தினத்துக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக