லேபிள்கள்

5.1.14

நடுநிலைப்பள்ளியில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு துறை வேறுபாடு கருதாமல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் - திருப்பூர் மாவட்ட TNGTF செயற்குழு அரசுக்கு கோரிக்கை

இன்று. (05.01.2014) வெள்ளகோவிலில் திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் காலை 10 மணி அளவில் நடைபெற்றது.


 செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;
1.   நடுநிலைப்பள்ளியில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு துறை வேறுபாடு கருதாமல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்

2.    நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கபட வேண்டும்.

3.    புதிய பங்களிப்பு ஒய்வுதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஒய்வூதிய திட்டத்தைத் தொடர அரசு ஆணை வெளிவிட வரவேண்டும்

4.    2004 ஆண்டு முதல் 2006 வரையான தொகுப்பூதிய பணிக்காலத்தை, பணிக்காலமாக  அறிவிக்க அரசை வலியுறுத்துவது..


5.   மேறுகண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விழுப்புரத்தில் மாநில அளவில் கவன ஈர்ப்பு உண்ணவிரதம் விரைவில் நடத்த மாநில அமைப்பிடம் வலியுறுத்துவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக