பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக அந்தந்த மாவட்ட தலை நகரில் கலை போட்டிகள் நடக்க உள்ளன. இதில் முதல் பரிசு பெறுவோருக்கு தலா ரூ.
10,000 பரிசு வழங்க உள்ளனர்.தமிழ் வளர்ச்சி துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தமிழில் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் பொருட்டில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடத்தப்பட உள்ளது
இதில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஒரு போட்டிக்கு, ஒரு மாணவர் வீதம் தலா மூன்று பேர், கல்லுாரி மாணவர்கள் இருவர் என, அந்தந்த மாவட்ட தலைநகரில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ளலாம். மாணவர்கள் தேர்வை அந்தந்த பள்ளி, கல்லுாரி நிர்வாகம் செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கான போட்டி அக்.,
1ம் தேதி, கல்லுாரி மாணவர்களுக்கு அக்.,
9 ம் தேதி நடைபெற உள்ளது.
வெற்றி பெறும் முதல் மாணவருக்கு தலா ரூ.
10,000, இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.
7,000 பரிசாக வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள், மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக