ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின்படி கள்ளர் பள்ளிகளில் பணிபுரிய விருப்ப மனுக்கள் அளித்த ஆசிரியர்களுக்கு, பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) 6.8.2014ல் வெளியிட்ட அறிவிப்பில், 'மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்புத் துறை துவக்க பள்ளிகளில் 64 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றை நிரப்ப 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிரமலைக் கள்ளர் வகுப்பை சேர்ந்த தேர்ச்சியாளர்கள் மட்டும் விருப்ப மனுக்கள் அளிக்கலாம்," என தெரிவிக்கப்பட்டது.
இதன்படி மூன்று மாவட்டங்களிலும் 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆக.,11 மற்றும் 12ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு விருப்ப மனுக்களை டி.ஆர்.பி., பெற்றது.சமீபத்தில் நடந்த பொதுமாறுதல் கவுன்சிலிங்கில், விருப்ப மனுக்கள் அளித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல், தொலைவில் உள்ள மாவட்டங்களில் அரசு தொடக்க பள்ளிகளில் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை பெற்ற 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதுவரை அந்த பணியிடங்களில் சேரவில்லை.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், "டி.ஆர்.பி., அறிவிப்பின்படி விருப்ப மனுக்கள் அளித்தோம். கவுன்சிலிங்கில் தொலைதுார மாவட்டங்களில் பணி ஒதுக்கி அலைக்கழிக்கின்றனர்.
இது 'டிரான்ஸ்பர்' பெயரில் வேறு 'எதையோ' எதிர்பார்ப்பதாக தெரிகிறது. கல்வி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக