லேபிள்கள்

29.9.14

புதிதாக நியமிக்கப்பட்ட 2,174 முதுகலை ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி இன்று தொடக்கம்

தமிழகத்தில் 2011&12 மற்றும் 2012&13ம் ஆண்டிற்கு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் நடந்த கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அவ்வாறு பணியில் சேர்ந்துள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு இன்று (29ம் தேதி) முதல் அக்டோபர் 1ம் தேதி வரை மூன்று நாட்கள் பாடவாரியாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


வேதியியல் பாட ஆசிரியர்கள் 219 பேருக்கு சேலம், சின்ன திருப்பதி ஜெய்ராம் கலை அறிவியல் கல்லூரியிலும், 317 ஆங்கில ஆசிரியர்களுக்கு திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியிலும், 191 தாவரவியல் ஆசிரியர்களுக்கு ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியிலும் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

283 கணித ஆசிரியர்களுக்கு சின்ன சேலம் சிறுமலர் மேல்நிலை பள்ளியிலும், 178 விலங்கியல் ஆசிரியர்களுக்கு ஈரோடு, நஞ்சுண்டபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளியிலும், 313 வணிகவியல் ஆசிரியர்களுக்கு கோபி, தாசம்பாளையும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலை பள்ளியிலும், 225 இயற்பியல் ஆசிரியர்களுக்கு திண்டுக்கல் பறைபட்டி ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரியிலும், 270 பொருளியல் ஆசிரியர்களுக்கு தஞ்சாவூர் கே.நெடுஞ் செழியன் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திலும், 178 வரலாறு ஆசிரியர்களுக்கு மதுரை அழகர்கோயில் மகாத்மா மாண்டிச்சேரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. மொத்தம் 2174 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக