லேபிள்கள்

29.9.14

தமிழகத்தில், காலியாக உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கு நாளை கலந்தாய்வு

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கு, இரண்டு கட்டமாக, கலந்தாய்வு முடிந்து இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சுய நிதி கல்லுாரிகளில் ஒதுக்கீடு பெற்றும் மாணவர்கள் சிலர் சேராமல் விட்டுள்ளனர்.


இந்த இடங்கள், சேர்க்கையில் மீதமுள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான, இறுதிக்கட்ட கலந்தாய்வு, நாளை (செப்., 30) சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் நடக்கும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 'காலை, 9:00 மணி முதல், 11:00 மணி வரை கலந்தாய்வு நடக்கும். எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்ற விவரங்கள், இன்று வெளியிடப்படும். யார் யார் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்பது போன்ற விவரங்களை, www.tnhealth.orgஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக