லேபிள்கள்

29.9.14

நர்சிங் உதவியாளர் படிப்பு இன்று முதல் விண்ணப்பம்

'நர்சிங் உதவியாளர், விழி ஒளி பரிசோதகர் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டய, சான்றிதழ் படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படும்' என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில், 19 அரசு மருத்துவ கல்லுாரிகளில் மட்டுமின்றி, அதன் சார்பு மருத்துவமனைகளிலும், நர்சிங் உதவியாளர், விழி ஒளி பரிசோதகர், மருத்துவ பதிவேடு அறிவியல் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது.

இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:விண்ணப்பக் கட்டணம், 250 ரூபாய். தமிழகத்தில் உள்ள, 19 அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சென்னை, கிண்டியில் உள்ள, 'கிங்' ஆய்வு நிலையத்திலும், அக்., 13ம் தேதி வழங்கப்படும். மருத்துவக்கல்வி இயக்ககத்தில் விண்ணப்பம் வழங்கப்பட மாட்டாது.

விண்ணப்பங்களை, அக்., 14ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு, www.tnhealth.org மற்றும் www.tngov.in என்ற இணைய தளங்களைப் பார்க்கலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக