லேபிள்கள்

25.11.14

தொடக்க கல்வித்துறை புதிய உத்தரவு ஆசிரியர்கள் உயர்கல்வி பயில அனுமதி பெற புதிய வழிமுறை

தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசுதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பயில சம்பந்தப்பட்ட துறையின் முன்அனுமதி பெறுவது அவசியம்.

இந்த அனுமதியை பெற உரிய அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். நிபந்தனையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். 

இந்த நிலையில் தொடக்க கல்வி இயக்குனர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், ஆசிரியர்கள் அஞ்சல் வழிக்கல்வி மூலம் மேற்படிப்பு பயில அனுமதி வழங்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட உதவி மற்றும் கூடுதல்உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. எம்பில்., பி.எச்டி., ஆகிய மேற்படிப்புகளை அஞ்சல் வழியிலோ அல்லது பகுதி நேரமாகவோ, மாலைநேர வகுப்பு மூலமாகவோ பயில விரும்பும் ஆசிரியர்களுக்கு அவர்களது கடமை மற்றும் கற்பித்தலில் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த சுற்றறிக்கையை அனைத்து உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு வழங்கிட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்த அறிவிப்புக்கு தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக