தென் மாவட்டங்களைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மதுரையில் நாளை பயிற்சி வகுப்பு நடக்கிறது.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 2015 மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ளது.
இத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, அகர வரிசைப்படி 'ஆன்லைனில்' பதிவு செய்வது குறித்து, தென் மாவட்ட அளவில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மதுரை கோரிப்பாளையம் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாளை (நவ., 29) மதியம் 2:00 மணிக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது. மதுரை, நெல்லை, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, கல்வி மாவட்டத்திற்கு தலா 2 ஆசிரியர்கள், ஒரு ஆப்பரேட்டர் பங்கேற்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக