லேபிள்கள்

24.11.14

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம்:கற்பிக்க தயாராகிறது கர்நாடகா

மத்திய அரசின் உத்தரவுப்படி, கர்நாடகாவிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், அடுத்த ஆண்டிலிருந்து, மூன்றாவது மொழியாக, சமஸ்கிருதம் கற்பிக்கப்படுவதை பெரும்பாலான பள்ளிகள் வரவேற்றுள்ளன.கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது பாடமாக, ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு வந்தது. 



பள்ளிகள் தயார்:கடந்த அக்டோபர், 27ம் தேதி, ஜெர்மன் மொழிக்கு பதிலாக, சமஸ்கிருதத்தை பயிற்றுவிக்க, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்த, கர்நாடகா கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும்தயாராகி வருகின்றன.


மத்திய அரசின் முடிவை, கர்நாடகா சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் சீனிவாச வரகேதி வரவேற்று கூறியுள்ளதாவது:நம் மொழியை பயிற்றுவிப்பதற்கு பதில், அந்நிய மொழியை பயிற்றுவிப்பது தேவையற்றது.

மத்திய அரசின், உத்தரவு வரவேற்வேற்கத்தக்கது. துவக்கத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது விருப்ப பாடமாக சமஸ்கிருதம் கற்பிக்கப்பட்டது. அதன் பிறகே, விருப்ப மொழியாக, ஜெர்மன் மொழி அறிமுகப்படுத்தப்பட்டது.சமஸ்கிருதம், கற்று கொள்வதில் எவ்வித சிரமமும் இல்லை. அரசின் இந்த திட்டத்தினால், சமஸ்கிருதத்துக்கு உரிய அந்தஸ்து இனி கிடைக்கும். ஏற்கனவே, இந்தியை பாடமாக எடுத்துள்ளவர்களுக்கு, சமஸ்கிருதம் கற்பது கடினமல்ல. ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வதில், குழந்தைகளுக்கு சிரமமும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

இதேபோன்று, பெரும்பாலான கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர்களும், ஆசிரியர்களும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.இதற்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், 'ஜெர்மனி மொழிக்கு பதில், சமஸ்கிருதம் மொழியை, விருப்ப பாடமாக மாற்றுவதில், அரசு அவசரம் காட்ட தேவையில்லை. இந்த மாற்றம், குறிப்பாக, எட்டாம் வகுப்பு மாணவர்களை பாதிக்கும். இந்தாண்டு, செமஸ்டர் முடியும் வரை, அரசு, பொறுமையாக இருந்து இருக்கலாம்' என்றனர்.

மறுபரிசீலனை:பெங்களூரு பல்கலைக்கழக, அயல் மொழி துறை முன்னாள் தலைவர் ஹிரேசி கூறியதாவது:அடுத்தாண்டில் சமஸ்கிருத மொழியை துவக்குவது குறித்து, அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். திடீரென, இப்படியொரு முடிவை, அரசு எடுப்பது, அயல் நாட்டு மொழிகளை கற்பதில், மாணவர்களின் ஆர்வத்தை குறைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக