லேபிள்கள்

17.11.14

அரசு வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகளை யார் பயன்படுத்தலாம்?

தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ள உத்தரவு: சுழலும் சிவப்பு விளக்குளை மாநில கவர்னர்கள், முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டப்பேரவை தலைவர், மாநில அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகிய 6 பேர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சுழலும் வகையில் இல்லாமல் சாதாரண சிவப்பு விளக்குகளை சட்டப்பேரவை துணை தலைவர், தலைமை செயலாளர், ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர், மாநில ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், மாநில சட்ட ஆணையத்தின் தலைவர், மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர், மாநில தேர்தல் ஆணையர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞர், மாநில திட்ட ஆணையத் தின் துணை தலைவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ஆகிய 14 பேர் மட்டுமே பயன்படுத்தலாம்.இதே போல நீல நிற சுழலும் விளக்குகளை போலீஸ் டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பிக்கள், ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், மாநகர கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், கான்வாய்க்கு முன் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்கள், கூடுதல் ஆணையர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் (சட்டம், ஒழுங்கு) பயன்படுத்தி கொள்ளலாம்.சில அதிகாரிகள் பணி காரணமாக சாலை வழியாக செல்லும் போது அவர்கள் தடுக்கப்படாமல் இருக்க நீல வண்ணம் கொண்ட சுழலும் விளக்குகளை பயன்படுத்தி கொள்ளலாம். அதன்படி, அரசு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி ஆணையர்கள், பொது துறை நிறுவனங்கள், வாரியங்களின் தலைவர்கள், மாவட்ட நீதிபதிகள், பெருநகர முதன்மை நீதிபதிகள், உயர்நீதிமன்ற பதிவாளர்கள், கூடுதல் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை கலெக்டர்கள், வருவாய் கோட்டாட்சியர், மாநகராட்சி மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் ஆகிய 11 பேர் மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் அவசர காலங்களில் இயக்கக்கூடிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வாகனங்கள், போக்குவரத்து துறையின் அமலாக்க பிரிவு வாகனங்கள், காவல்துறையின் ரோந்து வாகனங்கள் ஆகியவை சிவப்பு, நீலம், வெள்ளை என்ற மூன்று வகையான நிறங்களில் எதையும் பயன்படுத்தி கொள்ளலாம். அதே சமயம் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஊதா நிற கண்ணாடியை கொண்ட ஒளிரும் சிவப்பு விளக்குகளுடன் பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக